அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: பொலிஸார்

policeபொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்படி அழைப்பு விடுக்கப்பட்டே பணமோசடிகள் நடந்திருப்பதாக புலன் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக அறிவித்தனர்.

பயமுறுத்தல், பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்யும் குழுக்களைப் பற்றிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor