அல்லைப்பிட்டியில் பற்றைக்கு விசமிகளால் தீவைப்பு!!

யாழ்ப்பாணம் தீவகம் – அல்லப்பிட்டிப் பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள பற்றைக் காணியில் விசமிகளால் மூட்டப்பட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்பு பிரிவு மற்றும் அப்பகுதி பொது மக்கள் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.

அல்லப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாமல் பற்றைக்காடாக காணப்பட்டது.

அந்தக் காணிக்குள் மிக நெருக்கமாக இருந்த பற்றையை விசமிகள் நேற்று சனிக்கிழமை பின்னிரவு 11 மணியளவில் தீ வைத்துள்ளனர்.

பற்றைகளில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் அதை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுள்குள் கொண்டுவந்தனர்.

இந்தத் தீப்பரவலால் பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts