இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களை வடமாகாண மாணவர்கள் பெற்று பயில்வது குறைவாக உள்ளது.ஆகவே இவ்வாறாக கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை மாணவர்கள் சரிவர பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யூன் 21ஆம் திகதியை யோகா தினமாக பிரகடனப்படுத்தியுள்ளார். எனவே இந்த யோகாதினத்தை வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.