அரியாலையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

லண்டனிலிருந்து நாடு திரும்பிய அவர், கட்டாயத் தனிமைப்படுத்தலை முடித்து அரியாலையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கியிருந்துள்ளார். அவர் கடந்த மாதம் கொழும்பு சென்று லண்டன் திரும்புவதற்கான பணிகளை முடித்து மீளவும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்புக்குச் சென்ற அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைப்பதற்காக கடந்த 11ஆம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்த போது, கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த 15 குடும்பங்களில் 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் இந்த சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor