அரியாலையில் வெடிபொருள் வெடித்ததில் பரபரப்பு

bomb-blastகுப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி உரிமையாளர் தீ மூட்டிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பகுதி 2010ஆம் ஆண்டில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.