அரியாலையில் மணல் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

arrest_1அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 உழவு இயந்திரங்கள் யாழ். பொலிஸாரினால் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் அதில் வந்தவர்களும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

இவர்கள் இன்று திங்கள் கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் சாதாரணமான அளவில் அல்லாது கூடுதலான மணல் ஒவ்வொரு உழவு இயந்திரத்திலும் ஏற்றப்பட்டு வந்த வேளையில் பொலிஸார் இவர்களை மடக்கிப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.