அரச மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்ற தடை!

அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணி புரிவது ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.அப்படி இருந்தும் ஒரு சிலர் தொடர்ந்தும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றுவது தெரிய வந்திருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தான் இந்த விசேட சுற்றறிக்கை பெப்ரவரி மாதம் வெளியிடப்பட விருக்கின்றது என்றும் அவர் கூறினார்.