யாழ். கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை அங்கத்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியம் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்திற்கு அங்கத்தவர்களைச் சேர்த்தல், உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல், தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், சிறப்பாக செயற்படுத்துதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிதியத்தில் தங்களது சிறப்பான செயற்பாடுகளை வழங்கிவருகின்ற 7 அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களுக்கு நினைவுப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் அந்தப் பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் சி.சத்திவேல், கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் இ.கிருஸ்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.