அரச அலுவலகத்தில் இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!!

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூதர்மட சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை. அலுவலக பணியாளர்கள் அனைவரும் வீதியிலேயே காத்திருந்தனர்.

இரவு நேர காவலாளி வழக்கம் போல அதிகாலையிலேயே கதவை திறந்து, காலையில் கடமையை கையளிப்பது வழக்கம்.

இன்று அவரை காணவில்லையென்றதும், கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பொலிசார் நடத்திய சோதனையில், பூட்டப்பட்ட அலுவலகத்தின் உள்ளே காவலாளி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சி.ரகுநாதன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor