அரசுக்கு பலம் தந்தால் வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும் – சுசில் பிரேமஜயந்த

susil-peremajeyanthaவடமாகாண சபை தேர்தலில் அரசுக்கு பலத்தினை தந்தால், வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்’ என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வலி வடக்கில் 50 வீதமானவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். 2010 இல் 37 சதுர கிலோமீற்றர் விடுவிக்கப்பட்டது. 2013 இல் 24 சதுர கிலோ மீற்றர் விடுவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 2009 முதல் 2013 வரை 42 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய 16 கிராம சேவையாளர் பிரிவுகளையும் பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடமாகாண சபை தேர்தலில் எமக்கு பலத்தினை தந்தால், அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுத்து விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்’ என்றார்.

இதேவேளை, ‘நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எந்தவெரு அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ள முடியாது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் கூடாது’ என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

‘வலிகாமம் கிழக்கு சிறுப்பிட்டி பகுதியில் வீதி திருத்தப் பணிகளை வேட்பாளர் ஒருவர் முன்னெடுத்தப்போது அப்பணிகள் பிரதேச சபை உறுப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டன’ இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எந்தவெரு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு வேட்பாளர்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தால் எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள்’ என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.