இலங்கை அரசுக்கு எதிராக போராடிய அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்ப்பது தவறு என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அணைவரும் பயங்கரவாதிகளே அவர்கள் யாரும் அரசியல் கைதிகள் அல்ல என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியதற்கு பதில் தரும் வகையில் நேற்று(திங்கட்கிழமை) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நியாயமற்ற அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாதிகளாக இனம் காணக் கூடாது என அவர் வலியுறுத்தி உள்ளாரர்.
அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காமல் சக மனிதர்களாக பார்க்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் இந்த அரசு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, என்றும் கூறியுள்ளார்.