அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்ட வரைவுத் திட்டம் எதிர்வரும் 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட வரைவு இன்னமும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
19ம் திருத்தச் சட்ட நகல் வரைவு தயாரிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.