அரசாங்கம் தோற்றுப்போவதற்காக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை: சுசில்

angajan-susilperemajeyanthaவடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர். இந்த தேர்தலில் நாங்கள் போட்யடியிடுவது தோற்றுப்போவதற்கு அல்ல. அதேபோல் வெற்றி பெறுவது சமாதானத்தினையும் நீதியையும் நிலைநாட்டவே’ என சுற்றாடல்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில்பிரேமஜயந்த தெரிவிததார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வடமாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள தேசியப் பாடசாலைகளைத் தவிர பல்வேறு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பல வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

வட மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லாத போதும் ஜனாதிபதி ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மாகாண சபையில் துரித அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டும் என்றால் ஆளுங்கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமே அது சாத்தியப்பாடானது’ என்று அவர் தெரிவித்தார்.

தொடர்படைய செய்தி

யாழில் சுசில் பிரேமஜயந்தவின் தேர்தல் பிரசாரம்