அரசாங்கத்தின் ஆதரவுடனே இந்து ஆலயங்கள் தாக்கப்படுகின்றன: ஆறு.திருமுருகன்

aru-therumuruganகிழக்கில் இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றது என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலாந்தர் தின நிகழ்வு நல்லூர் துர்க்கை அம்மன் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற போது நிகழ்விலேயே உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஒரு நாட்டில் மொழி சுதந்திரம், மதச்சுதந்திரம், மனிதநேயம் போன்றவற்றில் மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இவை மூன்றும் இல்லாத நாட்டில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். மதங்களுக்கு இந்நாட்டில் தற்போது துன்பகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஆன்மீகத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் பேசுவதில்லை நான் இங்கு அரசியல் பேசவில்லை. ஆனால் ஆத்மாக்களின் உரிமையைப் பற்றியே பேசுகின்றேன். இதற்கு தற்பொது ஏற்பட்டிருக்கின்றங நிலைமைகளே காரணமாகும்.

எங்களது நாட்டில் மிகத்துன்பமான நிலை இப்பபோது ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவது வீக்கிரகங்கள் களவாடப்படுவது, அசிங்கப்படுத்துவது போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இதற்கு பின்னால் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே இருக்கின்றது. இதனால் இவை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதிலும் கிழக்கிலே இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது ஆலயங்கள் இடிக்கப்படுவதும், இந்த இடத்தில் கொண்டு வந்துவேறு ஒரு மதச்சின்னத்தினை வைப்பதும் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது இத்தகைய நடவடிக்கையினால் சைவசயம் பாதுகாப்பின்றி காணப்படுகின்றது.

இந்து அமைப்புக்களும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிரான நடவக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் துணையுடனேயே நடைபெற்று வருகின்றது எங்கள் பிரச்சனையில் எங்கள் நலனின் அக்கறையுடன் செயற்படும் நாடு இந்தியா. இந்திய துணைத்தூதுவர் இங்கு வந்திருக்கின்றார்

இவ்வாறான பிரச்சனைகளில் இந்திய தலையிட்டு மதங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் மத ரீதியில் ஏற்படுகின்ற எதிர்ப்புக்களைத் தடுப்பதற்கும் மதங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியா உதவ வேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றம் யாழ். இந்தியத் துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழில் சுவாமி விபுலானந்தர் விழா