அயல் வீட்டுக்காரர் தாக்கி வயோதிபர் படுகாயம்

fight-warஅச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரரின் இரும்புக் கம்பித் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வல்லிபுரம் வடிவேலு (52) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (10) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயல் வீட்டுக்காரருடன் இந்த வயோதிபருக்குத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், வயோதிபர் இன்று (10) தனது வீட்டில் தனிமையில் இருந்த போது அயல் வீட்டுக்காரர் வயோதிபரின் வீட்டிற்கு வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தலையிலும், கால்களிலும் தாக்குதலுக்குள்ளாகிய இந்த வயோபதிபர் முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Recommended For You

About the Author: Editor