அமைச்சரின் உறுதிமொழியினை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடல்

வட மாகாண சுகாதார அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து சுகாதார தொண்டர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வட மாகாண சுகாதார அமைச்சிற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

IMG_0401(1)

நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் சுகாதார தொண்டர்களாக 1998ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றி வரும் யாழ். மாவட்டத்தை செர்ந்த தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைச் சந்தித்த வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நியமனம் வழங்க முடியாது என்றார்.

அத்துடன் தேவையின் அடிப்படையில் விரைவில் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார தொண்டர்களுக்கு மாகாண அமைச்சர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி

யாழ். வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு