அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார்

vicknewaran-tnaவாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். அதில் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்குபற்றுவது வழமையாகும்.

இந்த அடிப்படையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் அமைச்சரவை கூட்டம் முதற் தடவையாக இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனாலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.