அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன்: விக்கினேஸ்வரன்

வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

vickneswaran

யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் இறுதியான முடிவுக்ள எதுவும் எட்டப்படவில்லை. ஓரளவான முடிவுகள் மட்டுமே எட்டப்பட்டுள்ளன. விரைவில், வட மாகாண சபைக்கான அமைச்சரவை விபரத்தினை அறிவிப்பேன் என்றார்.