அமெரிக்க தூதுவர் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

vicknewaran-tnaஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன்போதே வட மாகாண முதலமைச்சரை சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்தித்த முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் என்பது குறிப்பிடத்தக்கது.