அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துப் பேச்சு

இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் நேற்று இலங்கை வந்துள்ளார்.

aptul221441

இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

இதன்படி நேற்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தாம் விரிவாக அதுல் கேசாப் அவர்களுக்கு விளக்கியதாக கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Posts