அமெரிக்கா; டெக்சாஸில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், லொறியிலிருந்து அகதிகள் அதீத வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.