அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், காயமடைந்த 12க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

-14-fourth-july-0704-story-top

அமெரிக்காவில் 238வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆட்டம், பாட்டு, வாணவேடிக்கை என்று வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி மெரினா கடற்பகுதியில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக கடலில் 3 படகுகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor