யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்”, “அமெரிக்காவே வாயை மூடு”மற்றும் “எங்கள் தானைத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே” ஆகிய வாசகங்கள் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.