அமலன் கொலை வழக்கு, 6பேர் அடையாளம் காட்டப்பட்டனர்

Amalan-st-patricksசென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் டர்ஷன் அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பபட்டுள்ள எண்மரில் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் வைத்து அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எண்மர் தொடர்பிலான விசாரணை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பசீர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பபட்டது.

இதன்போது ஆள் அடையாளப்படுத்தும் முகமாக இன்று காலை மன்றில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் அடையாளம் காணப்பட்ட அறுவர் உட்பட 8 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts