அமலனின் குடும்பத்தினருக்கு யாழ்.மாநகர சபை உதவி

Amalan-st-patricksவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலனின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் யாழ். மாநகர சபை வீடுகட்டுவதற்கு உதவிகளை வழங்கியுள்ளது.

யாழ்.மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று நடைபெற்றது.

சபைக்கு தெரியப்படுத்தும் முகமாக முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இந்த அறிவிப்பினை சபையில் விடுத்திருந்தார்.

அவர் மேலும் தெளிவுபடுத்தியதாவது, அமலனின் குடும்பத்தினர் மிகவும் கஸ்ரத்தில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டினைக் கட்டி முடிப்பதற்கு உதவி செய்யுமாறு யாழ். மாநகர சபையிடம் கேட்டிருந்தனர்.

அதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் வீட்டினைக் கட்டி முடிப்பதற்கு 10 பை சீமெந்தினை யாழ். மாநகர சபை வழங்கியுள்ளது.

எனவே அவர்களால் வீடு கட்டி முடிக்கப்பட்டதும் மாநகர சபையினர் நேரில் சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor