அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில்;

சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை தீர்க்கப்படாததால் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை எனவும், 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த மாதத்தில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

14 நாட்களுக்குள் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்படும் என சம்பள ஆணைக்குழுவால் உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து அடையாள பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தாக யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார்.

இருந்த போதிலும் அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் சம்பள ஆணைக்குழு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஏமாற்றிவிட்டது. இதனையடுத்தே இன்று முதல் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.