அனைத்து தடைகளையும் தாண்டி கொழும்பை வந்தடைவோம் : மஹிந்த சூளுரை

எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னை வியக்கவைத்துவிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்து சூளுரைத்தார்.

பொதுமக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் கொள்கையில் நல்லாட்சிஅரசாங்கம் வற் வரியைஅதிகரித்தது. தேர்தலின் போதுவழங்கியவாக்குறுதிகள் மாயமாகிவிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துசெயற்படுகின்றனர். பொலிஸார் மக்களுக்கு பாதுகாப்புவழங்கி சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் எமது கண்டியிலிருந்து கொழும்பைநோக்கிய யாத்திரையை தடுக்கும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அரசாங்கம் இந்தளவு அச்சம் கொண்டிருக்கின்றது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் கூட்டுஎதிர்க் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை கொழும்பை நோக்கி அனைத்து சவால்களையும் தடைகளையும் தாண்டிசென்றடையும் . மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.

நீதிமன்றம் ஊடாகதடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நீதிமன்றின் உத்தரவிற்கு கட்டுப்பட்டும் அடிப்பணிந்தும் எமது பாதயாத்திரையை வெற்றிக்கரமாக ஆரம்பித்துள்ளோம். எனவே தடைகள் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றைவெற்றிக் கொள்வோம். பொதுமக்களின் நலன்கள் தொடர்பில் நல்லாட்சிஅரசாங்கம் ஒருபோதும் சிந்தித்தது இல்லை. அவ்வாறுசிந்தித்து இருந்தால் மக்கள் வாழ்வாதாரபிரச்சிணைகளைஎதிர் கொள்கையில் வரியை அதிகரித்திருக்காது. எமதுஆட்சியில் நாட்டின் அபிவிருத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுத்தே செயற்பட்டோம். ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. இதனை எதிர்த்து போராடும் போது இன்னோரன்ன அவதூறுகளும் சாடல்களும் எமக்கு எதிராக முன் வைக்கப்படுகின்றன.

ஆனால் எமது இந்த பாதயத்திரைக்கு அவை சவால்கள் அல்ல . அனைத்துசவால்களையும் தாண்டுவோம். மக்கள் எம்முடன் உள்ளனர் என்றார்.

Related Posts