பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் இன்று (11)யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் இயக்க பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் எந்த ஒரு அரசிலும் இல்லாதது போல இம்முறை தமிழ் முஸ்லிம் MPகளை அதிகம் கொண்ட அரசாக NPP அரசு இதுக்கின்றது.
ஆனாலும் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித பலமும் அற்றவர்களாக வாய்பேசா பொம்மைகளாக இருக்கின்றார்கள்.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கி பிரசாரம் செய்யப்பட்ட PTA நீக்கம் இன்று வரை இடம்பெறவில்லை.
ஊழல் அற்றவர்கள் என்ற போர்வையில் அரசியல் அற்றவகள் என்ற ஒரு கூட்டத்தோடு பழைய ஊழல்களை கிழறி ஏமாற்று வாசங்களோடு நாடகமாடும் அரசியலே இங்கு நடக்கிறது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வழங்கப்பட்ட உறுதிமொழி காலாவதியாகிவிட்டது.
வாரம் ஒரு பழைய ஊழல் படியலை சொல்கிறார்கள். ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை.
எனவே இந்த அரசின் பொய்களை இனியும் மக்கள் நம்பப் போவதில்லை.
அரசு மக்களின் வாக்குகளை சுவீகரிக்க செய்த வேடத்தை கலைத்து தனது சுயரூபத்தை காட்டுகின்றது.
தமிழ் மக்களே இனியும் நீன்ங்கள் பார்வையாளர்களாக அல்லது பார்ப்பவர்களாக இருக்காது பங்காளர்களாகுங்கள் எனவும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன் இந்த கையெழுத்து போராட்டம் அரசின் பொய்களையும் இயலாமையையும் வெளிக்கொணரும் ஒன்றாக இருக்கின்றது என்றும் ஏற்பாட்டாளர்கள் போரட்டத்தின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது