அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றலாம்

மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டு ள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகை யில் வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கான அனு மதியினை அரசாங்கம் வழங்கியுள் ளது என்று சுற்றாடல் துறை அமைச் சர் அநுர பிரியதர்­ன யாப்பா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை,மணல் ஏற்றிச் செல்வ தற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக கிடை க்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத் திற்கொண்டு சிறந்த தீர்மானமொ ன்றை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­, அமைச்சர் அநுர பிரியதர்­ன யாப்பாவுக்கு உத் தரவிட்டுள்ளார் என்று ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்நி லையில், மணல் ஏற்றிச் செல்வதற் கான அனுமதிப்பத்திர முறையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீ காரம் கிடைக்கப்பெற் றுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர் மான ங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது மேலும் குறிப்பிட்டார்.

Related Posts