இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு தெற்கே கோவளம் கடற்பரப்பினுள் வைத்து மூன்று இந்திய மீனவர்களை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
காரைநகர் கடற்பரப்பினுள் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்கள் மூவரையும் கைது செய்ததுடன், கைபற்றப்பட்ட விசைப் படகினை காங்கேசன்துறை கடற்படைத்தளத்துக்கு எடுத்து வந்துள்ளனர்.
கைதான மூவரையும் கடற்றொழில் நீரியல் வளத்துறை மாவட்ட அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
இவர்களை இன்றைய தினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.