அதிவிசேட சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி மறுப்பு : ஜோசப்

Joshep-starlin2புலமைப்பரிசில் பரீட்சையில் அதிவிசேட புள்ளிகள் பெற்ற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் உயர் கல்வியினை தொடர அனுமதி மறுக்கப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கனிஷ்ட பிரிவு கல்வியினை தெடர்வதற்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்கவில்லை.

இலங்கையில் 36 பிரபல பாடசாலைகள் இருக்கின்றன. அந்த பாடசாலைகளில் மாற்று வழிகளில் தரம் 6 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிவிசேட சித்தியடைந்த மாணவர்களுக்கு அப்பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படுகின்றது.

இவ்வாறு பிரபல பாடசாலைகளில் அனுமதி மறுப்பதனை தடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கும் கடந்த 03 ஆம் திகதி மாற்று வழி அனுமதிகளை தடுக்குமாறும், அவ்வாறு அனுமதி வழங்கும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.