அதிபரை இடமாற்றும் முயற்சிக்கு பெற்றோர் எதிர்ப்பு

protest-arpaddam-stopஆவரங்கால் நடராசா இராமசாமி மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுவதற்து எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்தக் கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். செம்மணி வீதியில் அமைந்துள்ள மாகாண கல்வி திணைக்களத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஒன்றுகூடிய பெற்றோர்கள் தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபரான சத்திய வரதனை இடமாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டித்தே பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த அரசியல் பலமிக்க மூன்று குடும்பத்தினரே குறித்த அதிபரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தற்போது கடமையாற்றி வரும் அதிபர் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றதாகவும், பாடசாலையின் வளர்ச்சியில் மிகவும் உறுதுணையாக செயற்பட்டு வருகின்றதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது கடமையில் உள்ள அதிபரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், அந் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்றால் தமது போராட்டமும் தொடர்ச்சியாக நடைபெறுமென்றும் பெற்றோர்கள் கூறினார்கள்.

Recommended For You

About the Author: Editor