தாவடிச் சந்திப்பகுதியில் 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்தோர் நித்திரையிலிருந்த நேரம் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.