அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை இன்று (செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது