அடுப்பு மூட்டிய பெண் வைத்தியசாலையில்

சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சமையலறை அடுப்பை மூட்டும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுப்பு எரிப்பதற்காக அடுப்பிற்குள் மண்ணெண்ணெய் ஊற்றிய போது, பெண்ணின் ஆடைகளில் தீ பற்றிக்கொண்டுள்ளது.

இதனால் பாதிப்படைந்த பெண், முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.