அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!

life insurance 3அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்யவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சகல திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு இடையிடையே சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு விசேடமாக காப்புறுதி திட்டமொன்றை அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை உரிய வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை. இதன் பிரகாரம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.