அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருதற்கு பெண்கள் அதிகம் பங்களிப்பு வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“பிரதேச, மாகாண சபை தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கெதிராக வாக்களித்தவர்களை வடக்கு, கிழக்கு மலையகத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
நாட்டில் வாழும் 52 சதவித மக்களை குறிப்பிட்ட 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவே” என கூறினார்.