அடகு மீட்கும் தவணையினை அதிகரித்தது மக்கள் வங்கி

Gold-nagai-juwaleபொது மக்களின் நன்மை கருதி மக்கள் வங்கியில் அடகு வைக்கும் நகைகளை மீளப் பெறும் வகையில் பகுதி பகுதியாக பணம் செலுத்தும் தவணையை மக்கள் வங்கி மேலும் அதிகாரித்துள்ளது.

மக்கள் வங்கியில் அடகு வைக்கும் நகைகளை மீளப் பெறுவதற்கு இது வரை காலமும் வட்டியையும் முதலையும் நான்கு தடவைகள் வங்கியில் செலுத்தி குறிப்பிட்ட அடகு நகையை மீட்கக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தன.

தற்போது மக்கள் வங்கியில் ஐயாயிரம் ரூபாவுக்க மேற்பட்ட தொகைக்கு அடகு வைக்கப்பட்ட நகைகளை பன்னிரெண்டு தடவைகள் பகுதி பகுதியாக வட்டியையும் முதலையும் செலுத்தி உரிய அடகு பொருட்களை மீட்டுக் கொள்ள முடியும் என சுன்னாகம் மக்கள் வங்கியின் முகாமையாளர் ப.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியில் அடகு வைக்கப்படும் நகைகள் இத்தகைய வசதிகள் கொண்டு தாம் அடகு வைத்த நகைகளை மீள எடுப்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.