அச்செழுவில் போதையில் மகனை கடித்த தந்தை!

biteபோதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

அளவுக்கு அதிகமாக மதுபாணம் அருந்தி விட்டு மனைவியை தாக்கியதனை அவதானித்த மகன் இடையில் சென்று தந்தையை தடுக்க முட்பட்டுள்ளார்.

தடுக்க வந்தது மகன் தான் என்பதுகூட தெரியாதளவுக்கு போதையில் நின்ற தந்தை மகனை பலமாக கடித்துக்குதறியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பலத்த கடிகாயங்களுக்குள்ளான கஜன்சன் (வயது 13) யாழ் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு வழங்கிய தகவலைஅடுத்து கடித்துக்குதறிய தந்தையை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரிடம் குறித்த தந்தை, தன்னை மனைவியும், மகனும் கடுமையாக தாக்கியதாகவும் அதற்கு பதிலாகவே தான் மகனை கடித்து குதறியதாகவும் என வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor