அச்சுவேலி மக்கள் வங்கியில் திருட்டு முயற்சி!

pbank-achchuvelyஅச்சுவேலி மக்கள் வங்கியில் நேற்று இரவு 1:00 மணியளவில் யன்னல் கம்பியை உடைத்து திருடமுற்பட்ட திருடர்கள் அங்கு பூட்டப்பட்ட மின்சார அலாரம் ஒலி எழுப்பியதையடுத்து தமது முயற்சியை கைவிட்டு ஓடித்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மதுசங்க தலைமையிலான குழு அவ்விடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.இதையடுத்து கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் மதுசங்க, குறித்த திருட்டு முயற்ச்சியில் ஈடுபட்டவர்கள் வங்கிக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி வங்கி யன்னலை உடைத்து பணம் வைக்கப்பட்ட பெட்டியை உடைக்க முற்றபட்டுள்ளனர்.இதன் போது பணப் பெட்டியில் பொருத்தப்பட்ட மின்சார அலாரம் ஒலிக்க திருடர்கள் தப்பித்து ஓடியுள்ளதாக தெரிவித்தார்.மேலும்,திருடவந்தவர்களின் கைரேகை மற்றும் சில தடையங்கள் கிடைக்கப்பட்டமையால் திருடர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனத் தெரிவித்தார்.