அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று வியாழக்கிழமை புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தனியாருக்குச் சொந்தமான வீட்டில் இயங்கி வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று முதல் புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
தற்போது பழைய பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் சகல வசதிகளுடனும் நேற்றுக் காலை11 மணியளவில் மங்கள வாத்தியங்கள் இசைக்க சமயப் பெரியோர்கள் சகிதம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி இந்து கருணரட்ணவின் அழைப்பின் பெயரில் வருகைதந்திருந்த வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.ஜி.எஸ் காமினி டீ சில்வா பொலிஸ் நிலையத்தை உத்தியோக பூர்வமாக திறந்து, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.ஜி நிஸந்கவிடம் கையளித்தார்.
இவ் விழாவில் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.