அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே சேவைசெய்கின்றோம்: அனந்தராஜ்

Anantharajபல்வேறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம் என்று வல்வெட்டித் துறை பிரதேச சபை தவிசாளர் வி. அனந்தராஜ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் நோக்கத்திற்காக இந்த சந்திப்பினை மேற்கொள்ளவில்லை, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மக்களுக்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதே தவிர அரசியலை வளர்க்கும் நோக்கமல்ல என்றார்.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு சில உள்ளூராட்சி அதிகாரிகள் தடுக்கின்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொண்டமனாறு பாலத்தினை பயன்படுத்துகின்றார்கள். தொண்டமனாறு பாலத்தினை பயன்படுத்துவதற்கு மக்கள் பெரும் சிரமப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தொண்டமனாறு பாலத்தினை பயன்படுத்துவதற்கு போலியான காரணங்களை சொல்லி தடை செய்கின்றார்கள். தொண்டமனாறு பாலத்தினால் தண்ணீர் வருவதில்லை தண்ணீர் தடை செய்து பொது மக்களுக்கு விரோதமான நடவடிக்கையினை எடுக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு பட்ட அழுத்தங்களின் மத்தியில் கடமையாற்றி வரும் இந்த வேளையில், உள்ளூராட்சி அதிகாரங்களுக்கு தடை விதிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம், அங்கு ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றதால், சபையின் அனுமதியுடன் ஆளணியினரை நிறுத்தி வேலைகளை முன்னெடுத்து செல்கின்றோம், அவ்வாறு பல்வேறு பட்ட அழுத்தங்களின் மத்தியிலும், கடமையாற்றி வருகின்றோம்.

அரசியல் முன்மாதிரியாக நான் இங்கு வரவில்லை என்றும் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பததே எமது நோக்கம் என்றார்.

அதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளோ தடையாக இருக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts