அங்கஜயனின் தந்தை பொலிஸாரால் கைது

சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையாரான இராமநாதன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பொலிஸார் அறிவித்துள்ளனர். சாவகச்சேரியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாவகச்சேரி வேட்பாளரான குமார் சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது அங்கஜயனின் தந்தையாரே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

அதன்படி இராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் வேறு ஒரு செய்தியின் படி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை இராமனாதனை யாழ். பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்றே தெரிவிக்கப்படுகின்றது.அவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டாரா என்பது குறித்து தெளிவான செய்திகள் தெரியவரவில்லை.