அங்கஜன் பிறந்தநாளை முன்னிட்டு காணமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தென்மராட்சி இளைஞர் அணியினால் வீடு கையளிப்பு

முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அங்கஜன் இராமநாதன் அவர்களது தென்மராட்சி இளைஞர் அணியினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தற்காலிக வீடு ஒன்று சாவகச்சேரி மந்துவில் மேற்கு பகுதியில் J/346 கிராம சேவகர் பிரிவில் அமைத்து கொடுக்கப்ட்டது.

அந்த வீட்டினை கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் கரங்களால் (09) அன்று கையளிக்கப்பட்டது. வீடு இன்றி தவிர்த்து வரும் இந்த குடும்பத்திற்கு நிம்மதியாக வாழ்க்கையை கொண்டு செல்லும் பொருட்டு அங்கஜன் இராமநாதன் அவர்களது ஆலோசனையில் செயற்பட்டு வரும் இந்த இளைஞர் அணி இச்செயற்பாட்டை செய்தமைக்கு அக்கிராம மக்கள் பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய விரைவில் புதிய வீட்டுத்திட்டம் ஒன்றின் மூலம் அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல வீடுகள் இன்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பங்களையும் இனம்கண்டு “நிறைவான குடும்பம் – நிறைவான கிராமம்” என்ற எனது திட்டத்திற்கு அமைய புதிய வீடுகள் வழங்க வழிகோலுவேன் அதை செயலுருாக்குவேன் என அங்கஜன் இராமநாதன் உறுதியளித்தார்.

தொடர்ந்து கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா வீட்டிற்கு சென்று ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

Related Posts