அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது

ramanathanஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை நேற்று புதன்கிழமை மாலைகைது செய்துள்ளதாகவும் அவரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அவரிடம் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட நீண்டநேர விசாரணைகளின் பின்னரே சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

அங்கஜயனின் தந்தை பொலிஸாரால் கைது