அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டம்!!

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது.

குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor