அ­நீ­திகள் தொடர்­க­தை­யாக முடி­யா­து – இரா. சம்­பந்தன்

எமது மக்கள் சமத்­து­வ­மா­கவும் சம­பி­ர­ஜை­க­ளா­கவும் வாழ்­வ­தற்­காக அதி­கா­ரங்கள் கூடிய அளவில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்றே நாம் கோரு­கின்றோம். எமது பிரச்­சி­னைகள் முன்­னெப்­போ­து­மில்­லா­த­ள­வுக்கு தற்­போது சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­ன.

sampanthan

சர்­வ­தேச சமூகம் எமது கோரிக்­கையின் நியா­யப்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

ஒரு­நாட்டில் ஒரு காலத்தில் அநீதி ஏற்­ப­டலாம். ஆனால் எந்­த­வொரு நாட்­டிலும் அந்த அநீதி தொடர்­க­தை­யாக இருக்­க­மு­டி­யாது. அது முடி­வுக்கு வர­வேண்­டிய ஒரு கால­கட்டம் இருக்­கின்­றது. இந்த நாட்டில் வாழ்­கின்ற பெரும்­பான்­மை­யின மக்­களை நாம் மதிக்­கின்றோம். அவர்­களை எமது சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கின்றோம். அந்த மக்­களை எமது எதி­ரி­க­ளாக நாம் கரு­த­வில்லை.

இந்த நாட்டில் அனை­வ­ரி­டமும் நட்­பாக சமத்­து­வ­மாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம். இதைத்தான் நாம் கேட்­கின்றோம் என்றும் அவர் கூறினார். நாங்கள் மிகவும் நிதா­ன­மாக, பக்­கு­வ­மாக, நேர்­மை­யாக, விசு­வா­ச­மாக எமது மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி இந்த நாட்டின் நன்­மை­யையும் கவ­னிக்க தயா­ராக இருக்­கின்றோம்.

பக்­கு­வ­மாக நியா­ய­மான பேச்­சு­வார்த்தை மூலம் ஒரு அர­சியல் தீர்ப்பை பெறு­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எமது நிலைப்­பாடு நன்கு தெரியும். அதனால் தற்­போ­தைய நிலையில் நாங்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருக்­க­வேண்டும் என்றும் சம்­பந்தன் எம்.பி. சுட்­டிக்­காட்­டினார்.

கவி­ய­ரசர் கண்­ண­தா­சனின் 87ஆவது பிறந்­த­தின நினை­வுப்­பெ­ரு­விழா நேற்று முன்­தினம் மாலை கொழும்பு தமிழ்­சங்­கத்தில் இடம்­பெற்­றது. மன்­றத்தின் ஸ்தாபகர் வேலணை வேணி­யனின் தலை­மையில் இடம்­பெற்ற இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மேற்­கண்­ட­வறு தெரி­வித்தார். இந்த நிகழ்வில் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான மனோ கணேசன் உட்­பட பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்­டனர்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய சம்­பந்தன் எம்.பி. கூறி­ய­தா­வது,

ஒரு நாட்டில் ஒரு காலத்தில் அநீதி ஏற்­ப­டலாம் நல­வர்­களால். ஆனால் எந்த ஒரு நாட்­டிலும் அந்த அநீதி தொடர் கதை­யாக இருக்க முடி­யாது. அது முடி­வுக்கு வர­வேண்­டிய ஒரு கால கட்டம் இருக்­கின்­றது. எமது நாட்டில் வாழ்­கின்ற தமிழ் மக்கள் இந்த நாட்டில் நீண்ட கால­மாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள். வேறு எவ­ரிலும் பார்க்க இவர்­களே இந்த நாட்டில் அதி­க­கா­ல­மாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள் என்று சொன்னால் அதை நிரூ­பிக்க கூடிய சான்­றுகள் இல்­லா­ம­லில்லை.

இந்த நாட்டில் வாழ்­கின்ற பெரும்­பான்­மை­யின மக்­களை நாம் மதிக்­கின்றோம். அவர்­களை எமது சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கின்றோம். அவர்­களை எமது எதி­ரி­க­ளாக நாம் நிச்­ச­ய­மாக கரு­த­வில்லை. இந்த நாட்டில் அனை­வ­ரி­டமும் நட்­பாக சமத்­து­வ­மாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம். இதைத்தான் நாங்கள் கேட்டோம்.

எமது பிரச்­சினை நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­ப­தாக தீர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். முப்­பதாம் ஆண்­டு­களில் டொனமூர் கமி­சனால் செய்­யப்­பட்­டுள்ள ஒரு சிபா­ரிசு அந்த காலத்தில் இலங்­கையில் மாகாண சபை உரு­வா­கி­யி­ருக்க வேண்டும் என்­பது. அந்தக் காலத்தில் தான் இந்­தி­யாவில் மாநி­லங்­களில் மாநில ஆட்சி, மாகாண ஆட்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 1935 ஆம் ஆண்டு அதன் தொடர்ச்­சி­யா­கத்தான் இந்­தியா சுதந்­தி­ர­ம­டைந்த பிறகு பல்­வேறு மாநி­லங்­களில் சுய ஆட்சி ஒழுங்கு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டது. துர­திஷ்­ட­வ­ச­மாக டொனமூர் கமிசன் அந்த சிபா­ரிசை செய்­தி­ருந்த போதும் கூட அந்த காலத்தில் இலங்­கையில் மாகாண சபை உரு­வா­க­வில்லை.

கண்டி இராச்­சி­யத்தைச் சேர்ந்த கண்­டியன் பெரும்­பான்மை மக்கள் டொனமூர் கமிசன் முன் சென்று இந்த நாட்டில் கண்­டிய பிர­சேத்தில் வாழ்­கின்ற சிங்­கள மக்கள், கீழ்­நாட்டில் வாழ்­கின்ற சிங்­கள மக்கள், வட­கி­ழக்கில் வாழ்­கின்ற தமிழ் பேசும் மக்கள் என மூன்று இன மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

எனவே இந்த நாட்டில் ஒரு சமஷ்­டிய ஆட்சி ஏற்­பட வேண்டும் எனக் கேட்­டார்கள். அந்த நேரத்தில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நாங்கள் குரல் கொடுக்­க­வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள் நாங்கள் சம­மாக வாழலாம் என்று நம்­பினோம். தந்தை செல்­வ­நா­யகம் சுய­ஆட்­சியை கேட்டார். தனி ஆட்­சியை அவர் கேட்­க­வில்லை. சமஷ்டி அடிப்­ப­டையில் சுய ஆட்­சியை அவர் கேட்டார். அதற்­காக சத்­தி­யாக்­கி­ரக போராட்டம், ஒப்­பந்­தங்கள் செய்தார். ஒத்­து­ழைப்­புகள் நக­ரினார். இறு­தியில் ஆங்­கி­லேயர் நிறை­வேற்­றிய அர­சியல் சாத­னத்தை நீக்­கி­விட்டு 1972 ஆம் ஆண்டு தங்­க­ளது அர­சியல் சாதனம் மூல­மாக பெரும்­பான்மை இனத்­தினர் மேலா­திக்­கத்தை திணித்­தார்கள். அதன் பிறகு தான் அவர் 1976 ஆம் ஆண்டு பிரி­வி­னையை கோரினார்.

70 ஆம் ஆண்டு தேர்­தலில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நாம் தெளி­வாக கூறி­யி­ருக்­கின்றோம். எமது மக்கள் பிரி­வி­னையை ஆத­ரிக்க கூடாது. பிரி­வி­னையை ஆத­ரிக்­கின்ற கட்­சி­யி­னரை, ஆத­ர­வா­ளர்­களை எமது மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும் என்று நாங்கள் எழுத்தில் 70 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாக கூறி­யி­ருந்தோம். அதற்­காக எமது மக்கள் வேத­னைப்­பட்­டார்கள்.

பெரி­ய­வர்கள், கல்வி படைத்­த­வர்கள், கல்­வி­மான்கள், பேரா­சி­ரியர் சுந்­தி­ர­லிங்கம் போன்­ற­வர்கள் அன்று தேர்­தலில் மோச­மாக தோல்­வி­ய­டைந்­தார்கள். அதன் பிறகு 70 ஆம் ஆண்டு அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­பட்ட பின் நாங்கள் தனி நாடு கேட்­க­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டோம். அதன்­பி­றகும் கூட 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமிழர் விடு­தலை கூட்­ட­ணிக்கு ஒரு ஆணையை கொடுத்­தி­ருந்த போதிலும் கூட நாங்கள் ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வை ஏற்­ப­தற்கு தயா­ராக இருக்­கின்றோம் என்­பதை பகி­ரங்­க­மாக எமது சார்பில் அண்ணன் அமிர்­த­லிங்கம் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதைத் தொடர்ந்­துதான் ஆயுதப் போராட்டம் நடை­பெற்­றது. ஏறத்­தாழ 30 வரு­டங்­க­ளாக, ஒரு இளைஞர் இயக்கம் அரசை எதிர்த்துப் போரா­டி­யது. ஒரு கால­கட்­டத்தில் சம இரா­ணு­வப்­ப­லத்தை தக்­க­வைத்­துக்­கொண்­டி­ருந்­தது. தற்­போது அப்போர் முடி­வுக்கு வந்து ஐந்து வரு­டங்கள் ஆகி­விட்­டன.

நாங்கள் இன்று சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் எமது பிறப்­பு­ரி­மையை அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டிய நிலையில் இருக்­கின்றோம். இந்­நாட்டில் சம பிர­ஜை­யாக வாழ்­வ­தற்கு எமக்கு ஒரு தீர்வு அளிக்­கப்­ப­ட­வேண்டும் என்று நியா­ய­மான கோரிக்­கையை கேட்­கின்றோம். இது எவ­ராலும் மறுக்­கப்­ப­ட­மு­டி­யாத கோரிக்கை.

உல­கத்தில் வெவ்­வேறு பாகங்­களில் வெவ்­வேறு நாடு­களில் பல்­வேறு இனங்கள், பல்­வேறு மதங்­களை பின்­பற்­று­ப­வர்கள், பல்­வேறு கலா­சா­ரங்­களை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள், பல்­வேறு மொழி­களில் பேசு­கின்­ற­வர்கள் வாழ்­கின்ற நாடு­களில் இவ்­வி­த­மான ஒழுங்­குகள் இருக்­கின்­றன. அதைத் தான் நாங்கள் கேட்­கின்றோம். இது மிகவும் நியா­ய­மான கோரிக்கை. எவ­ராலும் மறுக்­க­மு­டி­யாத கோரிக்கை.

இந்த அடிப்­ப­டையில் தான் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அதைத் தொடர்ந்­துதான் மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. அது முதல்­படி. இன்­றைக்கு எமது மக்கள் பெரும்­பான்­மை­யி­ன­மாக வாழ்­கின்ற பிர­தே­சங்­களில் எமது பொரு­ளா­தார ரீதி­யான, சமூக ரீதி­யான, கலா­சார ரீதி­யான உரி­மை­களை பேணிப்­பா­து­காத்து அதை முன்­னேற்­று­வ­தற்­காக, சமத்­து­வ­மாக வாழ்­வ­தற்­காக எமது மக்கள் சம பிர­ஜை­க­ளாக வாழ்­வ­தற்­காக அதி­காரம் கூடி­ய­ளவில் பகிர்ந்து அளிக்­கப்­ப­ட­வேண்டும் என்று நாங்கள் கேட்­கின்றோம். எமது பிரச்­சினை முன் எப்­போதும் இல்­லாத அள­விற்கு இன்­றைக்கு சர்­வ­தே­ச­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச சமூகம் எமது கோரிக்­கை­யி­னு­டைய நியாய ஏற்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

நாங்கள் மிகவும் நிதா­ன­மாக, பக்­கு­வ­மாக, நேர்­மை­யாக, விசு­வா­ச­மாக எமது மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி இந்த நாட்டின் நன்­மை­யையும் கவ­னிக்கத் தயாராக இருக்கின்றோம். பக்குவமான நியாயமான பேச்சுவார்த்தையின் மூலமாக ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இது இன்றைய சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெரியும். அதனால் நாங்கள் அனைவரும் ஒன்றுமையாக இருக்க வேண்டும்.

எமது மக்கள் மிகவும் பாரதூரமான வகையில் துன்பங்களை துயரங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அது மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பு அறுபதுகளில், எழுபதுகளில், எணபதுகளில், தொண்ணூறுகளில் தொடர்ச்சியாக அவர்கள் பல யுத்தங்களில் சிக்கி சின்னாபின்னமானார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு இப்போது பெயர் புலம்பெயர் தமிழ் மக்கள். அம்மக்கள் மீண்டும் எமது நாட்டுக்கு வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

Related Posts