யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும் மன்னார் 33 செல்சியஸும் பதிவாகும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் உடலில் வெப்பப்பிடிப்பு அதிகமாகி சோர்வு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அதிகளவு குடிதண்ணீரை அருந்துவதுடன் குளுமையான பழங்கள் மற்றும் உணவு வகைகளை உட்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.