வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணியில் வீடொன்றில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகத்தில் அங்கு அகழ்வுப் பணிகளை பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்தனர்.
புத்தளத்தில் வீட்டு உரிமையாளர் உள்ளார் என்றும் அங்கு புத்தளத்தில் உள்ள சிலர் வந்து சென்றதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், ஆயுதங்கள் புதைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனையடுத்து வட்டுக்கோட்டை மற்றும் இளவாளைப் பொலிஸாரின் பங்குபற்றலுடன் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து அந்த வீட்டில் இன்று வியாழக்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுத்தனர். எனினும் மேலதிக விவரங்களைப் பொலிஸாரிடம் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
.