மக்கள் பிரதிநிதிகள் சுயநலமாக செயற்பட்டதாலேயே காணிகள் அபகரிக்கப்பட்டன –விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநலமாக செயற்பட்டதாலேயே கிழக்கில் காணி அபகரிப்புகள் சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழ் பேசும் மக்களின் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் அரசதரப்புடனும் பேச வேண்டும்.

இதனை அனுபவம் வாய்ந்தவர்களின் அனுசரணையுடன் உரிய புள்ளி விபரத்தின் அடிப்படையில் தீர்க்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

Related Posts